வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

தமிழகத்தில் 1,870 வி.ஏ.ஓ.க்களை நியமிக்க அரசு முடிவு: செப்டம்பர் 30ல் எழுத்து தேர்வு


தமிழ்நாடு முழுவதும் 1,870 கிராம நிர்வாக அதிகாரிகளை (விஏஓ) தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30 ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் 1,870 கிராம நிர்வாக அதிகாரிகளை (வி.ஏ.ஓ.) தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30ம் தேதி டி.என்.பி.சி. சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேர்வாணையத்தின் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10 ஆகும். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் மாதம் 30ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வு எழுதுவோருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்.

ஆதிதிராவிடர், அருந்ததியர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும். தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் விவரங்கள் தேவை என்றால் தேர்வாணைய அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (044-2829 7591 மற்றும் 2829 7584), கட்டணமில்லாத சேவை எண்ணிலோ (1800 425 1002) தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 3,484 வி.ஏ.ஓ. இடங்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...