வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் பல்வேறு அலுவலக பணிகள் 2013 May Updates | www.bis.org.in


இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் பல்வேறு அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பிஸ்மார்க்/ ஹால்மார்க் முத்திரை வழங்கும் இந்திய தர நிர்ணய நிறுவனம் ‘பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ்’. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் தர முத்திரை வழங்குவது இந்த நிறுவனமே. வேறுபல ஆய்வுகளிலும் இது ஈடுபடும்.
தற்போது இதன் கிளைகளில் உதவியாளர், மொழி பெயர்ப்பாளர், சுருக்கெழுத்தாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இந்திய குடிமகன்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்–பணியிடங்கள்

அசிஸ்டன்ட் – 17 பேர்
ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (இந்தி) – 2 பேர்
லோயர் டிவிசன் கிளார்க் – 46 பேர்
ஜூனியர் ஸ்டெனோகிராபர் – 21 பேர்
ஸ்டெனோகிராபர் – 15 பேர்
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் – 97 பேர்
வயது வரம்பு
அசிஸ்டன்ட், ஸ்டேனோகிராபர் பணிகளுக்கு 18–30 வயதுடையவர்களும், இதர பணிகளுக்கு 18 முதல் 27 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 31–3–13 தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி
அசிஸ்டன்ட் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், கிளார்க் பணிக்கு பட்டப்படிப்புடன், ஒரு வருட கணினி படிப்பு அவசியம், தட்டச்சு திறனும் தேவை.
ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு பட்டப்படிப்புடன் ஒரு வருட கணினி சான்றிதழ் படிப்பும், 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறனும் இருக்க வேண்டும். ஸ்டேனோகிராபர் பணிக்கு பட்டப்படிப்புடன், 100 வார்த்தை சுருக்கெழுத்து மற்றும் கணினி தட்டச்சுதிறன் அவசியம்.
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மைக்ரோபயாலஜி பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு அல்லது இது சார்ந்த அறிவியல் இளங்கலைப் படிப்பு அவசியம்.
ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் பணிக்கு முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் ஆங்கிலத்தில் இளங்கலை அளவுக்கு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தி அல்லது ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள், டிரான்ஸ்லேட்டர் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். டிவிசன் கிளார்க் பணிக்கு எழுத்து தேர்வுடன் தட்டச்சு தேர்வும், ஸ்டெனோகிராபர் பணிக்கு எழுத்து தேர்வுடன், சுருக்கெழுத்து தேர்வும் நடைபெறும். எழுத்து தேர்வில் தவறான பதிலுக்கு 0.25 நெகட்டிவ் மார்க் வழங்கப்படும்.
கட்டணம்
அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் ஆகிய பணிகளுக்கு ரூ.535 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஜூனியர் ஸ்டேனோகிராபர் பணி மற்றும் லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு 385 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணம் செலுத்துவோர் ஸ்டேட் வங்கி கிளைகளில் இணையதள செலான் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் பிஸ் நிறுவன இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஸ்டெப் 1 விண்ணப்பம் சமர்ப்பித்த 2 நாட்களுக்குள்ளாக கட்டணம் செலுத்திவிட வேண்டும். பின்னர் ஸ்டெப் 2 அப்ளிகேசன் நிரப்பி அனுப்ப வேண்டும். புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட அளவில் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்க வேண்டும். விண்ணப்ப நகல்களை தபாலில் அனுப்ப வேண்டிய தேவையில்லை.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆரம்பமான நாள் : 27–4–13
ஸ்டெப் 1 விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 17–5–13
கட்டணம் செலுத்த கடைசி நாள் : 21–5–13
ஸ்டெப் 2 விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் : 24–5–13
மேலும் விரிவான விவரங்களை அறிய www.bis.org.in   என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...