வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பட்டதாரிகளுக்கு வங்கியில் கிளார்க் வேலை | www.tmb.in   2013

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கிகளில் ஒன்றாகும். தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது கிளார்க் பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் 26 வயதுடையவராக இருக்கலாம். வயது வரம்பு 31.3.2013 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். வயது வரம்பு தளர்வு கடைப்பிடிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை 55 சதவீதம் மதிப்பெண்ணுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் முழுநேரப் படிப்பாக நேரடி கல்வி பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் பட்டதாரிகள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு கணினி அறிவு அவசியம்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.150 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணம் குறுக்கீடு செய்யப்பட்ட டி.டி. ஆக இணைக்கப்பட வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22–5–13 முதல் 15–6–13 தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம் திறந்திருக்கும். விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் பூர்த்தியான ஆன்லைன் விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து கட்டண டி.டி. மற்றும் குறிப்பிட்ட சான்றிதழ் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi 628002   . நகல் விண்ணப்பம் ஆன்லைன் பதிவு செய்த அடுத்த 5 நாட்களுக்குள் கிடைக்கும் படியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பமான நாள் : 22–5–13
ஆன்லைன் பதிவுக்கு கடைசி நாள் : 15–6–13
நகல் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் நகல் சென்றடைய கடைசி நாள் : 20–6–13
விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களை   www.tmb.in      என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...