திருவள்ளூரில் 108 அவசர ஊர்தி சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
திருவள்ளூர் டி.எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவியாளர் பணிக்கு 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்.சி அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள், செவிலியர் பிரிவு படித்தவர்கள் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அல்லது தேர்ச்சி பெறாத 25 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு அனுபவம் வாய்ந்தவராக இருப்பது அவசியம்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், உரிய சான்றிதழ்களுடன் காலை 10 மணி முதல் 2 மணிக்குள் நேரில் வரவேண்டும். அவசரகால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படுபவர்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவர்
No comments:
Post a Comment