மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்வசதிக் கழகத்தில், உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3 ஆண்டு சட்டப் படிப்பு அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு முடித்தவர்கள், பொது மேலாளர், உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கம்பெனி செகரட்ரிஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் உறுப்பினர்கள் மற்றும் CA அல்லது CWA சட்டப் படிப்பை முடித்தவர்களும் உதவி மற்றும் துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
B.E அல்லது B.Tech பட்டப் படிப்பை படித்து, MBA அல்லது PGDM அல்லது M.Tech. படித்தவர்கள், இயக்குனர் மற்றும் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனிப்பட்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப் படிப்பு முடித்து MBA படித்தவர்களுக்கு 2 பொது மேலாளர் பணியிடங்கள், ஒரு உதவி பொது மேலாளர் பணியிடம், ஒரு தலைமை மேலாளர் பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
CA அல்லது CWA படித்தவர்களுக்கு ஒரு உதவி பொது மேலாளர் பணியிடம், ஒரு தலைமை மேலாளர் பணியிடம், ஒரு கணக்கு அலுவலர் பணியிடம் உள்ளது. மனித வள மேம்பாட்டுத் துறை அலுவலருக்கு ஒரு பணியிடம் உள்ளது. இதற்கு சட்டப் படிப்பு முடித்து, முதுநிலை பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பிக்கும் வழி முறைகள்: