வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC group I hall ticket download 2013


குரூப் 1 முதனிலைத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகிய இணைய தளங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், குரூப் 1-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை துணை ஆணையாளர், மாவட்டப் பதிவாளர் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு வரும் 16 தேதி காலை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 33 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...