வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

குரூப் 1 தேர்வு : 25 பணியிடங்களுக்கு 1.30 லட்சம் பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப் 1-க்கான முதற்கட்டத் தேர்வு, இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 33 மையங்களில் இன்று நடந்த குரூப் 1 முதல் நிலை தேர்வை 1.30 லட்சம் பேர் எழுதினர். 25 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (காலி பணியிடம் 8), போலீஸ் டிஎஸ்பி (4), வணிகவரித்துறை துணை ஆணையாளர் (7), மாவட்ட பதிவாளர் (1) மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி (5) ஆகிய 25 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 16ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 


அதன்படி, இன்று காலை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதற்காக மாநிலம் முழுவதும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.சென்னையில் மட்டும் சுமார் 27 ஆயிரம் பேர் எழுதினர். பறக்கும் படை கண்காணிப்பு முறைகேடுகளை தடுக்க மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆர்.ஏ.புரம் ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ், செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது பேசிய நடராஜ், ‘‘குரூப் 1 தேர்வுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடக்கிறது. அடுத்தகட்ட, அதாவது மெயின் தேர்வு மே மாதம் நடக்கும். மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். மெயின் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்படும்'' என்றார். இந்த ஆண்டு சென்னையைப் போல கோயமுத்தூர், சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தேர்வு எழுதினர். வழக்கமாக குறைந்த அளவிலானவர்கள் விண்ணப்பிக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...