வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணிகள் 2013


என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மருத்துவர், பொது மேலாளர், மொழி பெயர்ப்பாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
பொது மருத்துவம் சார்ந்த 4 பணியிடங்கள், பொது அறுவை சிகிச்சை சார்ந்த 4 பணியிடங்கள், குழந்தை மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவில் 3 பணியிடங்கள் மற்றும் தோல் மருத்துவம் சார்ந்த 1 பணியிடம் ஆகியவை உள்ளன. சுரங்கப் பணிகள் சார்ந்த பொது மேலாளர் பணிக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதேபோல் இந்தி அதிகாரிகள் பணிக்கு 2 இடங்களும், இந்தி மொழிப் பெயர்ப்பாளர் பணிக்கு 7 காலிப் பணியிடங்களும் உள்ளன.
விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, தேர்வு முறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களைப் பெற www.nlcindia.com என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏப்ரல் 29-ஆம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப மே மாதம் 6-ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...