வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

கப்பல் படையில் ஆசிரியர் பணியிடங்கள் ஆண்–பெண் இருபாலருக்கும் வாய்ப்பு 2013: Indian Navy Recruitment


கப்பல்படையில் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
கப்பல்படையில் பணியாற்றுவது இன்றைய இளைஞர்களின் கனவுப் பணிகளில் ஒன்றாக இருக்கும்.  அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் கப்பல்படையானது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பல்வேறு கல்வித் தகுதி உடையவர்களையும் தேர்வு செய்து பயிற்சியுடன் கூடிய பணி வாய்ப்பு வழங்கி வருகிறது.
தற்போது ‘கோர்ஸ் கமென்சிங் டிச– 2013’ பயிற்சித் திட்டத்தில் லாஜிஸ்டிக் கேடர், எஜுகேசன் பிராஞ்ச் மற்றும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு 31–5–13 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கான தகுதிகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
பயிற்சியின் பெயர் : கோர்ஸ் கமென்சிங் டிச–2013 (லாஜிஸ்டிக் கேடர், எஜுகேசன் பிராஞ்ச், ஏர் டிராபிக் கண்ட்ரோல்)
வயது வரம்பு
லாஜிஸ்டிக்ஸ்/ஒர்க்ஸ் பணி மற்றும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் பணியிடங்களுக்கு 19½ முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2–1–1989 முதல் 1–7–1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும்.
எஜுகேசன் பணிக்கு 21–25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2–1–1989 முதல் 1–1–1993 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள இரு தகுதித் தேதிகளில் பிறந்தவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
லாஜிஸ்டிக்ஸ்/ஒர்க்ஸ் பணிகளுக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பி.காம்/எம்.காம், பி.ஏ./எம்.ஏ. (பொருளாதாரம்), பி.பி.ஏ./எம்பி.ஏ, பி.பி.எம், பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டப்படிப்புகள், முதுகலை சான்றிதழ் படிப்புகள் படித்தவர்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஜுகேசன் பணிகளுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ்சி. (இயற்பியல், கணிதம்), எம்.சி.ஏ., எம்.எஸ்சி (ஆபரேசனல் ரிசர்ச்/அனலிசிஸ்), எம்.எஸ்.சி. (மெட்டராலஜி, ஓசனோகிராபி, அட்மாஸ்பெரிக் சயின்ஸ்) மற்றும் எம்.ஏ. (ஆங்கிலம், வரலாறு) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றும் பி.இ.,பி.டெக்/எம்.டெக்(மெக்கானிக்கல்), கம்ப்யூட்டர்சயின்ஸ், ஐ.டி, படித்தவர்கள், எம்.டெக் (மெட்டராலஜி, ஓசனோகிராபி, அட்மாஸ்பெரிக் சயின்ஸ் படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஏர் டிராபிக் கண்ட்ரோல் பணிகளுக்கும் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. (இயற்பியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ்) படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்களுடனும், எம்.எஸ்.சி. (இயற்பியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ்) படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பெண்கள் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். பார்வைத்திறன் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2 முறையில் எழுத்து தேர்வு, கலந்துரையாடல் தேர்வு, உடற்திறன் தேர்வு, குழு தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுக்கவும். அதில் ஒன்றை அனைத்து சான்றிதழ் நகல்களுடன் சான்றொப்பம் செய்து கீழ்க்காணும் முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்க வேண்டும்.
அஞ்சல் முகப்பில் விண்ணப்ப எண் மற்றும் பயிற்சி திட்டத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்.
நகல் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :–
றிஷீst ஙிஷீஜ் ழிஷீ.04
சிலீணீஸீணீளீஹ்ணீஜீuக்ஷீவீ
ழிமீஷ் ஞிமீறீலீவீ 110021
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பமாகும் நாள் : 8–5–13
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31–5–13
விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி www.joinindiannavy.com

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...