வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Central Govt Technical Jobs : மத்திய அரசு நிறுவனத்தில் 844 தொழில்நுட்ப பணிகள் 2013


நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.–வில் 844 தொழில்நுட்ப பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு, டிப்ளமோ படிப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் டி.ஆர்.டி.ஓ. என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 360 பேரும், டெக்னீசியன் (ஏ) பணிகளுக்கு 223 பேரும், நிர்வாகப் பணியிடங்களுக்கு 261 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 844 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பணியின் பெயர் – பணியிடங்கள்
சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் – 360 பேர்
டெக்னீசியன் (ஏ) – 223 பேர்
அட்மின்/அலைடு – 261 பேர்
வயது வரம்பு
சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டெக்னீசியன் (ஏ) பணிக்கு 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
அட்மின் பணியிடங்களில் 18 முதல் 30 வயதுடையவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
வயது வரம்பில் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி
சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு அக்ரிகல்சரல் சயின்ஸ், ஆட்டோ மொபைல், பயோடடெக்னாலஜி, பாட்டனி, கெமிஸ்ட்ரி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், ஜியாலஜி, லைபிரரி சயின்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, நர்சிங், பார்மசி, போட்டோகிராபி, ரேடியோகிராபி, வெட்னரி சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் படித்தறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
டெக்னீசியன் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சியுடன், பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ. பிரிவில் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாக பிரிவில் இந்தி அசிஸ்டன்ட், பெர்சனல் அசிஸ்டனட், அட்மின் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி அசிஸ்டனட், பயர் என்ஜின் டிரைவர், பயர்மேன் உள்ளிட்ட பணிகள் உள்ளன. இது தொடர்பான படிப்புகள் படித்தவர்களுக்கும், 10,12–ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, கணினி, டிரைவிங் போன்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணிக்கான முழுமையான கல்வித்தகுதியை இணையதளத்தில் படித்தறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
கட்டணம்
விண்ணப்பதாரர் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாகவோ, தபால் வழியில் விண்ணப்பிப்பவர்கள் இந்திய அஞ்சல் முத்திரையாகவோ இணைக்கலாம். எஸ்.சி.எஸ்.டி, ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் செல்போனில் இருந்து முதலில் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு   சிணிறிஜிகிவி   <இடைவெளி> நீங்கள் தேர்வெழுத விரும்பும் நகரின் கோடு எண்<இடைவெளி>நீங்கள் விண்ணப்பிக்கும் பணியின் கோடு எண்<இடைவெளி>பிறந்தநாள் <இடைவெளி>பெயர் ஆகிய விவரங்களை டைப் செய்து 56677 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி பதிவு எண் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பின்னர் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, அதனை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
டெக்னீசியன் மற்றும் அட்மின் பணிகளுக்கு ஆன்லைன் வழியாகவோ, ஏ4 காகிதத்தில் விண்ணப்பம் தயாரித்தோ அனுப்பலாம்.
தபால் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி:–
ஞிஸிஞிளி ணிஸீtக்ஷீஹ் ஜிமீst 2013, றிஷீst ஙிஷீஜ் ழிஷீ.:8626, ஞிமீறீலீவீ 110054
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 27–5–13
வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை கணக்கிடும் கட்–ஆப் தேதி : 27–5–13
மேலும் விவரங்களை ஷ் என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...