எல்லைக் காவல் படையில் 444 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 12–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் பின்வருமாறு :–
இந்தோ–திபத்தியன் பார்டர் போலீஸ் போர்ஸ் ‘ஐ.டி.பீ.பி’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் துணைப் பிரிவுகளில் இதுவும் ஒன்று. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது செயல்படுகிறது.
தற்போது இந்த படைப்பிரிவில் தகவல் தொடர்பு பிரிவில் சப்–இன்ஸ்பெக்டர், மற்றும் ஹெட்–கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. மொத்தம் 444 பேர் தேர்வு செய்யபட இருக்கின்றனர். பிளஸ்–2 படித்தவர்கள் மற்றும், 10–ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
பணியின் பெயர் : பணியிடங்கள்
சப்–இன்ஸ்பெக்டர் (தகவல் தொடர்பு) – 10 பேர்
ஹெட்கான்ஸ்டபிள் (தகவல் தொடர்பு) – 369 பேர்
கான்ஸ்டபிள் (தகவல் தொடர்பு) – 65 பேர்
வயது வரம்பு
சப்–இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு 20 முதல் 25 வயதுடையோரும், ஹெட் கான்ஸ்டபிள் பணிகளுக்கு 18 முதல் 25 வயதுடையோரும், கான்ஸ்டபிள் பணிகளுக்கு 18–23 வயதுடையோரும், விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 28–6–13 தேதியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் அல்லது பி.இ. படிப்பில் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஹெட்கான்ஸ்டபிள் பணிக்கு 12–ம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் பாடம் அடங்கிய பிரிவை தேர்ந்தெடுத்து படித்து 45% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது 10–ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படிப்பில் எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் படித்தவர்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கான்ஸ்டபிள் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ. படிப்புகள் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கொள்ளப்படும்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி உடல் தகுதி தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
உடற்தகுதி
அனைத்து பணி விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் 170 செ.மீ உயரமும், 80–85 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி. பிரிவினருக்கு உயரம் மற்றும் மார்பளவில் தளர்வு அனுமதிக்கப்படும். பார்வைத்திறன் 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசேதனை என அந்தந்த பணிகளுக்கு ஏற்றாற்போல் தேர்வுகள் நடைபெறும். அனைத்து தேர்வுகளிலும் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னிலை பெறுபவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை அஞ்சல் முத்திரையாக இணைக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். படிவத்தை தெளிவான கையெழுத்தில் நிரப்பி அனுப்புதல் அவசியம். விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி, சான்றொப்பம் இட்டு, சான்றிதழ் நகல், கட்டண அஞ்சல் முத்திரை அல்லது வரைவோலை ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:–
Post Box No 344, GPO, Lucknow (UP)
முக்கிய தேதி:
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் : 28–06–2013
மேலும் விரிவான விவரங்களை http://itbpolice.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்
No comments:
Post a Comment