ரிசர்வ் வங்கியில் ‘கிரேடு–பி’ ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு: –
இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் தலைமை வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியில் பணிபுரிவது இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும். அவர்களுக்கு சிறந்த வாய்ப்பளிக்கும் விதமாக தற்போது அதிகாரி (கிரேடு பி ) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் ‘டிப்பார்ட்மென்ட் ஆப் எக்கனாமிக் அன்ட் பாலிசி ரிசர்ச்’ பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பணியின் பெயர் : ஆபீசர்ஸ் (கிரேடு–பி)
பணியிடங்கள் : 98 (பொது – 49, ஓ.பி.சி.– 27, எஸ்.சி.– 15, எஸ்.டி– 7)
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2–6–1983 தேதிக்கும், 1–6–1992 தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே. விண்ணப்பதாரர் எம்.பில் மற்றும் பிஎச்.டி. பட்டம் பெற்றவராக இருந்தால் 31 மற்றும் 33 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து பருவ தேர்வுகளிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். முதுகலைப் பட்டம் படித்தவராக இருந்தால் அதில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்
எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் தவிர்த்து மற்றவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் 12–6–13 முதல் 11–7–13 வரை திறந்திருக்கும். விண்ணப்பம் சமர்ப்பித்த பின் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பமான நாள் : 12–6–13
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11–7–13
மேலும் விவரங்களை அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment