வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

ரூபாய் நோட்டு அச்சகத்தில் டெக்னீசியன் பணி | www.bnpdewas.spmcil.com

ரூபாய் நோட்டுகளை அச்சிடும் மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
‘செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடட்’ நிறுவனம், இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களை அச்சிடும் நிறுவனமாகும். ஸ்பிம்சில் (ஷிறிவிசிமிலி) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் 9 அலகுகளைக் கொண்டது. இதில் ஒரு அலகான ‘பேங்க் நோட் பிரஸ்’ நிறுவனம் மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் நகரில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னீசியன், சூப்பிரவைசர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 112 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
மொத்த பணியிடங்கள் : 112
பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் :

ஜூனியர் டெக்னீசியன்(கண்ட்ரோல், பிரிண்டிங், பிளேட் மேக்கிங்) – 104 பேர், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் – 5 பேர், ஜூனியர் டெக்னீசியன் (கிரேன் ஆபரேட்டர்) – ஒருவர், ரீடச்சர் (டிசைனிங்– என்கிரேவிங்) – ஒருவர், சூப்பிரவைசர் (கண்ட்ரோல்) – ஒருவர்
வயது வரம்பு:
ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 27–7–13 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணிகளுக்கு இதே தேதியில் 25,28,30 வயதுடையவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி
ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு ஐ.டி.ஐ.யில் பிரிண்டிங், பிளேட்மேக்கிங் அல்லது ஆப்செட் அல்லது லெட்டர் பிரஸ் அல்லது கெமிக்கல் அல்லது எலக்ட்ரோபிளேட்டிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிரிண்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ படிப்பு முடித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.
ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவும், நிமிடத்திற்கு 40 வார்த்தை தட்டச்சு செய்யும் திறனும் அவசியம். இதர பணிகளுக்கும் பணிசார்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த பணிக்கான முழுமையான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து விண்ணப்பம் தயாரிக்க வேண்டும். அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்க்
காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.100 டி.டி.யாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி:–
General Manager. Bank Note Press, Dewas M.P. 455001 ( அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.)
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27–7–13
மேலும் விரிவான விவரங்களை www.bnpdewas.spmcil.com என்ற முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...