அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் முதன்மையானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ).
விரிவாக்கப்பணிகள் மற்றும் கூடுதல் கிளைகள் தொடங்குவதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி வங்கிப்பணிகளுக்கு எஸ்.பி.ஐ, தேர்வு செய்கிறது.
அரசுடைமை ஆக்கப்பட்ட பிற 19 வங்கிகள் தங்களுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் கிளார்க்குகளை தேர்வு செய்ய ஐ.பீ.பி.எஸ். என்ற அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறும் முதன்மை மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த 19 வங்கிப்பணிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.
ஆனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா போன்ற துணை வங்கிகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய தனியாக எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடத்துகின்றன.
அந்த அடிப்படையில் இந்த 2013–ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த ஆண்டு 19 ஆயிரம் கிளார்க்குகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் கல்வித்தகுதி பிளஸ்–2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி என்ற அடிப்படையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்ணயம் செய்து இருந்தது. இந்த ஆண்டும் இந்த கல்வித்தகுதி தொடரலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பிற வங்கிகள் கிளார்க் பணிகளுக்கு பட்டப் படிப்பில் தேர்ச்சி என்பதை கல்வித்தகுதியாக வைத்திருப்பதால் அதேபோன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் கிளார்க் பணிகளுக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
hi sir/mam when next sbi bank exam?
ReplyDeleteplease kindly reply my email id vl.palanivel@gmail.com
ReplyDeletemobile number: 9944614147