வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

South Central Railway various jobs in the former soldiers 2013(தெற்கு மத்திய ரயில்வேயில் முன்னாள் ராணுவத்தினருக்கு பல்வேறு பணியிடங்கள்)

தெற்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 311 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர தகுதியுடைய முன்னாள் ராணுவத்தினரிடமிரு
ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Civil Engineering துறையில் Trackman அல்லது Gateman பணிக்கு 61 காலிப் பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்கல், Signal and Tele communication Engineer துறைகளில் கிரேடு-2 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர Operating பிரிவில் Assistant Pointsman பணிக்கு 70 காலிப் பணியிடங்கள் உள்ளன.
ராணுவத்தில் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை, மருத்துவ ரீதியிலான உடல்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இறுதி செய்யப்படும்.

சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச பயணச் சலுகை அட்டை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.scr.indianrailways.gov.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணிபுரிந்து, Army Class I சான்றிதழ் தேர்சசி அல்லது அதற்கு நிகரான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினருக்கு 33 வயதும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 36 வயதும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 38 வயதும் உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணிப் பிரிவிற்கு ஏற்ற மருத்துவ ரீதியிலான உடல்தகுதி உடையவர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற முடியும். ஒவ்வொரு பிரிவிலும் மருத்துவ ரீதியிலான உடல் தகுதி தர அளவுகள் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.scr.indianrailways.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
ஜூன் 22 முதல் 28 வரையிலான கால கட்டத்தில் வெளிவந்த Employment News செய்தித் தாளில் விண்ணப்பப் படிவ மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் A4 தாளில் விண்ணப்பங்களை தட்டச்சு செய்து தயார் செய்து கொள்ளவும்.சுய விவரக் குறிப்பு விவரங்களை நீலம் அல்லது கருப்பு மை பால் பாயின்ட் பேனா உதவியுடன் விண்ணப்பதாரர் நிரப்ப வேண்டும்.
தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை Assistant Personnel Officer , Recruitment, Railway Recruitment Cell, First Floor, C-Block, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Andhra Pradesh - 500 071 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 15-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...