வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

UPSC Interview date for work to assistance commandos 2013 (உதவி காமாண்டோக்கள் பணிக்கான நேர்முகத்தேர்வு தேதி அறிவிப்பு)

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2012-ஆம் ஆண்டு நடத்திய உதவி காமாண்டோக்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்கள் 011-2338 6281 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது சந்தேகங்களை 011 -2338 7310 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் அனுப்பலாம்.
டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி
அலுவலகத்தில் 'சி' வளாகத்திற்கு அருகே உள்ள தகவல் மையத்தை அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு www.upsc.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...