வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

மத்திய காவல்துறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,240 பணிகள் 2013


உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,240 காலிப் பணியிடங்கள் மத்திய காவல்துறையில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
மத்திய காவல் பிரிவுகளான டெல்லி போலீஸ், CAPF எனப்படும் மத்திய அதிரடிப் படை, CISF எனப்படும் தொழிலக பாதுகாப்புப் படை, NCP எனப்படும் ஆகியவற்றில் சப் இன்ஸ்பெக்டர், துணை சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. CAPF பிரிவில் ஆயிரத்து 176 காலிப் பணியிடங்கள், டெல்லி போலீஸ் பிரிவில் 330 காலிப் பணியிடங்கள், CISF-ல் துணை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 734 பணியிடங்கள் உள்ளன.
எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆளுமைத் தேர்வு, உடல்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் இறுதித் தேர்ச்சி முடிவு செய்யப்படும். கூடுதல் தகவல்களைப் பெற www.ssconline.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
மத்திய காவல்துறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 2013-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி கால கட்டத்தில், 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 170 சென்டி மீட்டர் உயரம் உடையவர்களாகவும், மார்பளவு 80 முதல் 85 சென்டிமீட்டர் வரை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 162.5 சென்டி மீட்டர் உயரமும், 77 முதல் 82 சென்டி மீட்டருக்கு மார்பளவும் இருந்தால் போதுமானது. பெண் விண்ணப்பதாரர்கள் 157 சென்டி மீட்டர் உயரமும், தாழ்த்தப்பட்டோர் 154 சென்டி மீட்டர் உயரமும் இருந்தால் போதுமானது. பார்வைத்திறன் 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் இருக்க வேண்டும்.
உடல்தகுதி மற்றும் உடல்திறன் கொண்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை, www.ssconline.nic.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
மத்திய காவல்துறையில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை மத்திய ஆளெடுப்பு அஞ்சல் முத்திரையாகவும், ஸ்டேட் வங்கியில் செலான் அல்லது ஆன்லைன் மூலமும் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.ssconline.nic.in என்ற இணைய தளத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். பகுதி 1 மற்றும் பகுதி 2 என இரண்டு பிரிவாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். முதல் பகுதியை ஏப்ரல் 10 தேதிக்குள்ளாகவும், இரண்டாம் பகுதியை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும். இணைய தள விண்ணப்ப மாதிரியை பிரதி எடுத்து அஞ்சல் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாளான ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள், தமிழக விண்ணப்பதாரர்கள், அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director, Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai - 600 006.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...