வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TRP பொறியியல் கல்லூரியில் பல்வேறு பணிகள் 2013


திருச்சியில் உள்ள TRP பொறியியல் கல்லூரியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன..
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் TRP பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், துணைப் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் ஆகிய பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. சிவில், CSE, ECE, EEE, MECH, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு, DCSE, DECE, DCE, ITI Turner உள்ளிட்ட கல்வித் தகுதியை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் சார்ந்த Senior Manager, Manager ஆகிய பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவற்றைத் தவிர, Chief Security Officer, Assistant Security Officer, Accoundants, Hostel Wardens, Audit Assistants, Stores Assistants, Supervisors உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களும் உள்ளன. தகுதியுடையவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை மார்ச் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவ்ரி:
The Principal, TRP Engineering College, Near Samayapuram, Irungalur, Trichy - 621 105.
அல்லது trp.principal@srmcampus.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431 - 305 8681 அல்லது 98414 73874 அல்லது 98845 81748 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...