வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

விளையாட்டு வீரர்களுக்கு ரிசர்வ் வங்கியில் பணி 2013 April Updates

விளையாட்டு வீரர்களுக்கு ரிசர்வ் வங்கியில் சிறப்பு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளின் தலைமை வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியில் அசிஸ்டன்ட் மற்றும் ஆபீஸ் அட்டன்டன்ட் பணிக்கு விளையாட்டு வீரர்களில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் 18 பேரும், கால்பந்து வீரர்கள்9 பேரும், பேட்மிண்டன் வீரர்கள் 8 பேரும், கேரம் வீரர் ஒருவரும், டேபிள்டென்னிஸ் வீரர்கள் 8 பேரும், டேபிள் டென்னிஸ் (பெண்கள்) 4 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1–3–13 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2–3–1987 மற்றும் 1–3–1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 வருடமும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
அசிஸ்டன்ட் பணிக்கு இளங்கலைப் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். ஆபீஸ் அட்டன்டன்ட் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதியுடன் மாநில அல்லது தேசிய அளவில் விளையாட்டில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மாநிலங்களுக்குள் மாவட்ட அளவிலான போட்டிகள், பல்கலைக்கழக போட்டிகள், மாநில பள்ளிகளுக்கான தேசிய போட்டிகள், அகில இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்து மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஏ4 காகிதத்தில் விண்ணப்ப படிவம் தயாரித்து நிரப்பி அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் புகைப்படம், வலதுகை பெருவிரல் ரேகை இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை குறிப்பிட்ட முகவரிக்கு ஏப்ரல் 15–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விரிவான விவரங்களை www.rbi.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...