வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

ராணுவ தொழிற்சாலையில் 541 வேலைவாய்ப்புகள் April Updates 2013

ராணுவ தளவாட தொழிற்சாலையில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 541 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாட சாமான்களை, ராணுவ தளவாட தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் ஆவடி உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
தற்போது மகாராஷ்டிர மாநிலம் பாந்திராவில் செயல்படும் தளவாட தொழிற்சாலையில் குரூப்–சி பணியாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 541 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – குரூப்–சி ஒர்க்கர்
பணியிடங்கள் – 541
வயது வரம்பு

மொத்தம் 16 பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். துருவன் பணிக்கு 20 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். லேபரேட்டரி அசிஸ்டன்ட் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணிகளுக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். உச்ச வயது வரம்பு, விண்ணப்ப காலத்தின் இறுதி நாளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
கல்வித் தகுதி
துருவன் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சியும், 165 செ.மீ உயரமும், 77–82 செ.மீ. மார்பளவும், 45 கிலோவுக்கு குறையாத எடையும் இருக்க வேண்டும்.
லேபரேட்டரி அசிஸ்டன்ட் பணிக்கு 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் லேப் அசிஸ்டன்டாக 2 ஆண்டு அனுபவம் இருந்தாலும், இந்தி அல்லது ஆங்கிலம் கற்பிக்கும் திறன் பெற்றிருந்தாலும் சிறப்புத் தகுதியாக கொள்ளப்படும்.
இதர பணிகளுக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐ.டி.ஐ. அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும். தேசிய பயிற்சி சான்றிதழும் அவசியம்.
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரி பார்த்தல், உடற்தகுதி சோதித்தனர், ஸ்கிரீனிங் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் ஆகியவை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக கையொப்பம் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். எனவே இவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சான்றிதழ் எண்கள் குறிப்பிட வேண்டி இருப்பதால் அசல் சான்றிதழ்களை அருகில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கவும்.
விண்ணப்ப காலம்
விண்ணப்பங்கள், ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ இதழில் இதற்கான விளம்பர அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 23–29 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் இடம் பெற்றுள்ளது.
விண்ணப்பிக்கவும், மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும் www.propex.gov.in என்ற முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...