வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை April 2013 updates

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 349 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கி மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. உதவி பொதுமேலாளர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 349 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்
பணியிடங்கள் – 349
வயது வரம்பு
அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் பணிக்கு 21 வயது முதல் 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சீப் மேனேஜர் பணிக்கு 43 வயதுக்கு உட்பட்டவர்களும், சீனியர் மேனஜர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கிரெடிட் ஆபீசர் பணிகளுக்கு 336 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 21 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
‘பிரின்டிங் டெக்னாலஜிஸ்ட்’ பணிக்கு 21 முதல் 40 வயதுடையோரும், செக்யூரிட்டி ஆபீசர் பணிக்கு 50 வயதுடையோரும், கம்பெனி செக்ரெட்டரி பணிக்கு 35 வயதுடையோரும், எக்னாமிஸ்ட் பணிக்கு 35 வயதுடையோரும் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். வயது வரம்பு 1–2–13 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
கல்வித் தகுதி
அனைத்து அதிகாரி பணிக்கும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு அவசியம். பணி சார்ந்த பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்புகளுடன், குறிப்பிட்ட கால அனுபவமும் தகுதியாக கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்குரிய சரியான கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்களை இணையதளத்தில் முழுமையாக படித்து அறிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குழு கலந்துரையாடல், உற்றுக் கவனிக்கும் ஆற்றல் தேர்வு, தனிநபர் நேர்காணல் இவற்றில் ஏதேனும் ஒரு முறைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.50 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணத்தை இணையதள செலான் மூலம் யூனியன் வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் வங்கி இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனுப்பிய பின்னர் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு அழைக்கும்போது அதனை கொண்டு சென்றால் போதுமானது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கால அவகாசம்: 3–4–13 முதல் 23–4–13 வரை
விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் : 3–4–13
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23–4–13
மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ள www.unionbankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...