வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பிரிவில் பல்வேறு பணிகள் 2013


இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பிரிவில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் கலைப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கணினி, கட்டடக் கலை, உணவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் 80 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர Economics, History, Political Science, Psychology, Chemistry, Chinese, Arabic உள்ளிட்ட பட்டப் படிப்புகளை முடித்தவர்களுக்கு ராணுவத்தின் கல்விப் பிரிவில் 20 காலிப் பணியிடங்கள் உள்ளன.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, இந்தியன் மிலிட்டரி அகாடமி மூலம், ஒரு வருட கால அளவில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சி காலத்தின் போது திருமணம் செய்து கொள்வதற்கும், பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் சேர்ந்து வசிப்பதற்கும் அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
இந்த பணியிடங்களில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள்:
இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பிரிவில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்கு, 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள், விண்ணப்பிக்கலாம். ராணுவக் கல்விப் பிரிவைப் பொறுத்தவரை, 23 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தொழில்நுட்பப் பிரிவில் சேர, B.E. மற்றும் B.Tech. படிப்புகளை, ஏதேனும் ஒரு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், ராணுவ பயிற்சிக்கு அனுப்பப்படுவதற்கு முன், அவர்கள் பட்டத் தேர்ச்சி சான்றிதழைப் சமர்ப்பிக்க வேண்டும். கல்விப் பிரிவில் பணிபெற விரும்புபவர்கள், கலை சார்ந்த இளநிலைப் பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
கலைப்பிரிவு பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்த பணிகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பிரிவில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் சேர்வதற்கு, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பிரிவு பணிகளுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணைய தளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி, வயது, பிறந்த நாள் உள்ளிட்ட சுயவிவரங்களை நிரப்பி, ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இரண்டு பிரதிகள் எடுத்துக் கொள்ளவும்.
அதில் ஒரு பிரதியுடன், தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் Gazetted Officer-ன் கையொப்பம் பெற்று அனுப்பவும். விண்ணப்ப உறையில், பணியின் பெயர் மற்றும் விரும்பும் பிரிவு ஆகியவற்றை குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
Director General of Recruiting - RTG 6, TGC, Section, West Block -III, R.K.Puram, New Delhi - 110 066.
விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க ஜூன் 20-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...