வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Bureau of Indian Standards-ல் அலுவலக மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பணிகள் 2013


மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் BIS எனப்படும் Bureau of Indian Standards அமைப்பில், அலுவலக மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உதவியாளர் பணிக்கு 17 காலிப் பணியிடங்கள், Hindi Junior Translator பணிக்கு இரண்டு பணியிடங்கள், Lower Division Clerk பணிக்கு 46 இடங்கள், Junior Stenographer பணிக்கு 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றைத் தவிர, கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மைக்ரோ பயாலஜி ஆகிய பிரிவுகளில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 97 காலிப் பணியிடங்கள் உள்ளன.
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, மொகாலி உள்ளிட்ட நகரங்களில் உள்ள BIS சோதனைச் சாலைகளில் பணியில் அமர்த்தப்படலாம். இதர பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, பெங்களூரு, சண்டிகர், கான்பூர், போபால், டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் உள்ள BIS அலுவலங்களில் இருக்கும் காலிப் பணியிடங்களில் அமர்த்தப்படுவர்.
அடிப்படைத் தகுதிகள்;

BIS அமைப்பில், அலுவலக மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Clerk பணிக்கு, ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன், கணினியில் ஓராண்டு பட்டயம் முடித்து இருக்க வேண்டும்.
நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகள் அல்லது 25 இந்தி வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். Junior ஸ்டேனோகிராபர் பணிக்கு இதே கல்வித் தகுதியுடன், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளை எழுதும் திறனுடன் இருக்க வேண்டும்.
கெமிக்கல், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க, இளநிலைப் பட்டம் அல்லது 3 ஆண்டு கால பட்டயப் படிப்பை அந்தந்த துறைகளில் முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யும் பணிக்கு ஏற்ப வயது வரம்பு 18 முதல் 30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்;
BIS நிறுவனத்தில், அலுவலக மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.bis.org.in என்ற இணையதளத்தை அணுகவும். விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே ஏற்கப்படும். இரு கட்டங்களாக ஆன்லைன் விண்ணப்பத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும். முதல் பிரிவில் விவரங்களை அளிக்க மே மாதம் 17-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணத்தை வங்கியில் SBI செலான் மூலம் வங்கியில் செலுத்த மே 21-ஆம் தேதி கடைசி நாள். Junior Stenographer மற்றும் Lower Division Clerk பணிகளுக்கு, விண்ணப்பக் கட்டணமாக 350 ரூபாயும் இதர பணிகளுக்கு, 500 ரூபாயும் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
வங்கியில் கட்டணம் செலுத்திய செலான் Journal No உடன், இரண்டாம் கட்ட பதிவை நிறைவு செய்யவும். இரண்டாம் கட்டமாக விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய மே மாதம் 24-ஆம் தேதி கடைசி நாள். பதிவிற்கு பின், இணையதளம் மூலம் உருவாக்கப்பட்ட பிரத்யேக பதிவு எண் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...