முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை க
ல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.