உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,240 காலிப் பணியிடங்கள் மத்திய காவல்துறையில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
மத்திய காவல் பிரிவுகளான டெல்லி போலீஸ், CAPF எனப்படும் மத்திய அதிரடிப் படை, CISF எனப்படும் தொழிலக பாதுகாப்புப் படை, NCP எனப்படும் ஆகியவற்றில் சப் இன்ஸ்பெக்டர், துணை சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. CAPF பிரிவில் ஆயிரத்து 176 காலிப் பணியிடங்கள், டெல்லி போலீஸ் பிரிவில் 330 காலிப் பணியிடங்கள், CISF-ல் துணை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 734 பணியிடங்கள் உள்ளன.
எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆளுமைத் தேர்வு, உடல்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் இறுதித் தேர்ச்சி முடிவு செய்யப்படும். கூடுதல் தகவல்களைப் பெற www.ssconline.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.