சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு
வினாத்தாள் எப்படி வெளியானது? என்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் கைது
செய்யப்பட்டுள்ள 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் சிக்கிய 4 பேர்
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 பதவிகளுக்கான தேர்வை
ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியது. அப்போது ஈரோட்டில் தேர்வு எழுதிய தனக்கொடி
என்பவர் மூலமாக வினாத்தாள் அவுட் ஆன விவரம் தெரியவந்தது. அவரும் அவரது
கணவர் செந்திலும் தேர்வு எழுதியவர்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்ட
ஆட்சியரிடம் புகாரும் கொடுத்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில்
தனக்கொடியும் அவரது கணவர் செந்திலும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத்
தெரிவித்ததால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் ஈரோடு போலீசிடம்
ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம்
வெப்படையைச் சேர்ந்த சுதாகரிடம் வினாத்தாளை விலை கொடுத்து வாங்கியதாக
ஒப்புக் கொண்டனர்.