மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த நடைமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதனை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று அறிவித்தார்.
வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற
GATE தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன 2013
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற GATE எனப்படும் Graduate Aptitude Test in Engineering தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன.
இதில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் இருந்து 22,476 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, 22,400 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால் உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தையும், பிகார் நான்காவது இடத்தையும், கேரளா ஐந்தாவது இடத்தையும் GATE தேர்வு முடிவுகளில் பிடித்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது 2013
விருதுநகர் மாவட்டத்தில் பணி நாடுநர்களுக்கு பயனளிக்கும் விதமாக, இரண்டு நாட்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகாசி அருகே தாயில்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முகாம் நடைபெறும்.
Subscribe to:
Posts (Atom)