ஆரம்பப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் தற்காலிக ஆசிரியர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் இந்த நடைமுறை இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறினர்.
மேலும் இத்தகைய நடைமுறை காரணமா
க நாட்டின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்க அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.கல்வி உதவியாளர்கள் நியமனம் குறித்த வழக்கு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிபதிகள், கல்வி உரிமைச்சட்டம் அமலில் இருக்கும்போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எப்படி சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பினர்.