இந்திய கடற்படையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
General Service பிரிவில், தொழில்நுட்ப பணிகள், நீர்முழ்கி கப்பல் பணி, மற்றும் Executive பணிகளுக்கு பொறியியல் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வர்களுக்கான நேர்காணல், கோவை, பெங்களூரு, போபால் ஆகிய நகரங்களில் நடைபெறும். இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் தேர்வுகளில் முதல் பிரிவில், Intelligent Test, Picture Perception மற்றும் குழுவிவாதம் நடத்தப்படும்.
இரண்டாம் பிரிவில், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த பிரிவுகள் சார்ந்த அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்படும். Executive ஆக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், கடற்படை சார்ந்த, வான்வழி, நிலவழி மற்றும் நீர்வழி செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவர்.