வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் பல்வேறு காலிப் பணிகள் 2013


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் கொச்சி சுத்திகரிப்பு மையத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரளாவில் உள்ள BPCL நிறுவனத்தில் கெமிக்கல் பிரிவில் 20 காலிப் பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 19 காலிப் பணியிடங்களும், எலக்டிரிக்கல் பிரிவில் 3 பணியிடங்களும் Instrumentation பிரிவில் 3 காலிப் பணியிடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 45 காலிப் பணியிடங்களில் 23 பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 12 பணியிடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், 8 பணியிடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தலா ஒரு பணியிடம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். மருத்துவ ரீதியான பூரண தகுதி உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
அடிப்படைக் கல்வித் தகுதிகள்:

கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவுகளில் உள்ள 45 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அடிப்படைக் கல்வித் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் Instrumentation ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டயப் படிப்பை முடித்திருப்பதும் அவசியம்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. ரீஃபைனிங், பெட்ரோலியம், கெமிக்கல், லுபிரிகன்ட், பெட்ரோ கெமிக்கல், உர தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் ஓராண்டு பயிற்சி அல்லது பணி முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, இரண்டாம் வகுப்பு போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படும். மத்திய அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 2013-ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி கால கட்டத்தில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டியதும் அவசியம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
விண்ணப்பங்களை A4 அளவு தாளில் தட்டச்சு செய்து தயார் செய்யவும். சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மதிப்பெண் பட்டியலின் நகல் உள்ளிட்ட தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து, அனுப்பவும். தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட சுய விவரங்களை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
பிறந்த நாள், மதிப்பெண் சராசரி, தேர்ச்சி பெற்ற வருடம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டியதும் அவசியம். விண்ணப்ப உறையில் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பிரிவை தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க அனுப்பி முகவரி:
The Senior Manager - Recruitment and Promotion, BPCL - Kochi Refinery, PB No. 2, Ambalamugal, Kochi - 682 302.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 22-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...