சென்னை அசோக் நகரில் உள்ள தொழிலாளர் மருத்துவ காப்பீட்டு நிறுவனமான ESIC சார்பில் துணை மருத்துவ பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Nursing Orderly மற்றும் Lab Assistant ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் பட்டியல் www.esicchennai.org என்ற இணைய தளத்தில் உள்ளது. தற்காலிகப் பட்டியலில் உள்ளவர்களுக்கு நேர்காணல் மூலம் தேர்ச்சி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி, நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கான கடிதங்கள் அஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் கடிதம் கிடைக்காதவர்களும், இணைய தளத்தில் விவரங்களை பெற்றுக் கொண்டு நேர்காணல் மையங்களுக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 044 - 2489 0865 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். அல்லது ms-odcchennai@esic.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.
No comments:
Post a Comment