வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 1,500 Probationary Officers பணிகள் 2013


பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் காலியாக உள்ள 1,500 Probationary Officers பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 21-ல் இருந்து 30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பத்தை www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய பிப்ரவரி 23-ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த பிப்ரவரி 23-ம் தேதி கடைசி நாளாகவும், ஆஃப்லைன் மூலமாக செலுத்த பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 28-ம் தேதி ஆகும். மேலதிக விவரங்களை பெற www.sbi.co.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் பணியிட தேர்வுக்கான விதிமுறைகள்:

ஊரக மின்வசதிக் கழகத்தில் பணி 2013


மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்வசதிக் கழகத்தில், உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3 ஆண்டு சட்டப் படிப்பு அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு முடித்தவர்கள், பொது மேலாளர், உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கம்பெனி செகரட்ரிஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் உறுப்பினர்கள் மற்றும் CA அல்லது CWA சட்டப் படிப்பை முடித்தவர்களும் உதவி மற்றும் துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
B.E அல்லது B.Tech பட்டப் படிப்பை படித்து, MBA அல்லது PGDM அல்லது M.Tech. படித்தவர்கள், இயக்குனர் மற்றும் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனிப்பட்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப் படிப்பு முடித்து MBA படித்தவர்களுக்கு 2 பொது மேலாளர் பணியிடங்கள், ஒரு உதவி பொது மேலாளர் பணியிடம், ஒரு தலைமை மேலாளர் பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
CA அல்லது CWA படித்தவர்களுக்கு ஒரு உதவி பொது மேலாளர் பணியிடம், ஒரு தலைமை மேலாளர் பணியிடம், ஒரு கணக்கு அலுவலர் பணியிடம் உள்ளது. மனித வள மேம்பாட்டுத் துறை அலுவலருக்கு ஒரு பணியிடம் உள்ளது. இதற்கு சட்டப் படிப்பு முடித்து, முதுநிலை பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பிக்கும் வழி முறைகள்:

CISF-ல் 464 தலைமை காவலர் பணியிடங்கள்


CISF எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Head Constable பணியில் சேர விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
464 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு முறையில் நியமனம் நடைபெற உள்ளது. அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்படும். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 167 புள்ளி 5 சென்டி மீட்டரும், பெண்கள் 157 சென்டி மீட்டரும், உயரம் இருக்க வேண்டியது அவசியம். சாதி மற்றும் இதர தகவல்களின் அடிப்படையில், சில தளர்வுகள் உண்டு. விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். மேலதிக விவரங்களை பெற, www.cisf.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம்.
தேர்வு நடைபெறும் முறைகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...