QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2024:
·
மாசாசூசெட்ஸ்
தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (MIT) தொடர்ந்து 12வது ஆண்டாக இந்த
தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
·
கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகம் ஆனது இதில் இரண்டாவது
இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
·
ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகம் ஆனது ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்
கழகத்தினைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
·
அமெரிக்கப்
பல்கலைக்கழகங்கள் ஆனது QS அமைப்பின் தரவரிசையில் மீண்டும் முன்னணி பெற்று, முதல் 20 இடங்களில் பாதி இடங்களுக்கும் மேலான
இடங்களைப் பெற்றுள்ளது.
·
இதில்
டெல்லியின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகமானது இந்த ஆண்டு 197வது
இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது. உலகளவில் முதல் 300 இடங்களில் இடம் பெற்ற பல்கலைக்
கழகங்களின் பட்டியலில் மற்ற மூன்று இந்தியத்
தொழில்நுட்ப கல்விக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
·
சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழிப் பாதையில் போக்குவரத்தினை தொடங்கச் செய்வதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தயாராக
உள்ளன.
·
விளாடிவோஸ்டாக்
- சென்னை கடல்வழிப் பாதை ஆனது, ஜப்பான்
கடல், தென் சீனக் கடல்
மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக செல்கிறது.
·
தற்போதைய
பாதையின் வழி மேற்கொள்ளப்படும் கடற்போக்குவரத்திற்கான
கால அளவான 32 நாட்களுடன் ஒப்பிடும் போது புதிதாக திறக்கப்பட
உள்ள இந்தப் பாதை வழியான போக்குவரத்தானது,
12 நாட்கள் மட்டுமே ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
·
இந்தப்
புதிய ஒரு பாதையானது, இந்தியாவிற்கு
தொலைதூரக் கிழக்கு நாடுகளுக்கான அணுகலை வழங்குவதோடு இரு நாடுகளுக்கும் இடையேயான
ஒரு வர்த்தகத்திற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
·
சமீபத்திய
ஆய்வானது, சூரியனின் காந்தப்புலமானது கிரகங்களுக்கு இடையிலான காந்தப் பகுதியில் எவ்விதத் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவான கருத்தினை வழங்கியுள்ளது.
·
சூரிய
மேற்பரப்பிலுள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசை (SMMF) ஆனது கிரகங்களுக்கு இடையேயான
காந்தப் பகுதியில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு
விண்வெளியின் வானிலையில் குறிப்பிடத்தக்கப் பங்கினையும் வகிக்கிறது.
· SMMF என்பது சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசையைக் குறிக்கிறது.