QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2024:
·
மாசாசூசெட்ஸ்
தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (MIT) தொடர்ந்து 12வது ஆண்டாக இந்த
தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
·
கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகம் ஆனது இதில் இரண்டாவது
இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
·
ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகம் ஆனது ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்
கழகத்தினைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
·
அமெரிக்கப்
பல்கலைக்கழகங்கள் ஆனது QS அமைப்பின் தரவரிசையில் மீண்டும் முன்னணி பெற்று, முதல் 20 இடங்களில் பாதி இடங்களுக்கும் மேலான
இடங்களைப் பெற்றுள்ளது.
·
இதில்
டெல்லியின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகமானது இந்த ஆண்டு 197வது
இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது. உலகளவில் முதல் 300 இடங்களில் இடம் பெற்ற பல்கலைக்
கழகங்களின் பட்டியலில் மற்ற மூன்று இந்தியத்
தொழில்நுட்ப கல்விக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
·
சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழிப் பாதையில் போக்குவரத்தினை தொடங்கச் செய்வதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தயாராக
உள்ளன.
·
விளாடிவோஸ்டாக்
- சென்னை கடல்வழிப் பாதை ஆனது, ஜப்பான்
கடல், தென் சீனக் கடல்
மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக செல்கிறது.
·
தற்போதைய
பாதையின் வழி மேற்கொள்ளப்படும் கடற்போக்குவரத்திற்கான
கால அளவான 32 நாட்களுடன் ஒப்பிடும் போது புதிதாக திறக்கப்பட
உள்ள இந்தப் பாதை வழியான போக்குவரத்தானது,
12 நாட்கள் மட்டுமே ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
·
இந்தப்
புதிய ஒரு பாதையானது, இந்தியாவிற்கு
தொலைதூரக் கிழக்கு நாடுகளுக்கான அணுகலை வழங்குவதோடு இரு நாடுகளுக்கும் இடையேயான
ஒரு வர்த்தகத்திற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
·
சமீபத்திய
ஆய்வானது, சூரியனின் காந்தப்புலமானது கிரகங்களுக்கு இடையிலான காந்தப் பகுதியில் எவ்விதத் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவான கருத்தினை வழங்கியுள்ளது.
·
சூரிய
மேற்பரப்பிலுள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசை (SMMF) ஆனது கிரகங்களுக்கு இடையேயான
காந்தப் பகுதியில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு
விண்வெளியின் வானிலையில் குறிப்பிடத்தக்கப் பங்கினையும் வகிக்கிறது.
· SMMF என்பது சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசையைக் குறிக்கிறது.
·
சூரியனுக்குள்
இருக்கும் ஆரம்பக் கட்டத்தில் உருவான ஒரு காந்தப்புலமானது SMMF உருவாவதற்கான மூல
ஆதாரமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
லித்தியம்
அயனி மின்கலத்தின் இணை கண்டுப்பிடிப்பாளர்:
·
லித்தியம்
அயனி மின்கலத்தினை உருவாக்கியப் பணிக்காக என்று புகழ் பெற்ற ஜான் குட்எனஃப் சமீபத்தில் அமெரிக்காவில் காலமானார்.
·
லித்தியம்
அயனி மின்கலத்தினை உருவாக்கியப் பணிக்காக, 2019 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான
நோபல் பரிசினைப் பெற்றவர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.
·
நோபல்
பரிசு பெற்ற மிக வயதான நபர்
குட்எனஃப் ஆவார்.
·
அவர்
பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க அறிவியலாளரான M. ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார்.
·
இத்தகைய
முதல் வகை இலகுரக, பாதுகாப்பான,
நீடித்து உழைக்கும் மற்றும் மீண்டும் மின்னேற்றம் செய்யக் கூடிய வணிக ரக மின்கலங்கள்
1991 ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்டன.
TNPSC :
·
8வது
உலக மருந்துத் தரநிலை உச்சி மாநாடு 2023 ஆனது, மும்பையில் 'நோயாளிகளை மையமாகக் கொண்ட வகையில்: உற்பத்தி மற்றும் தரத்தின் புதிய நிலைப்பாடு என்ற ஒரு கருத்துருவின்
கீழ் நடைபெற்றது.
·
இந்திய
மகளிர் இரட்டையர் இணையான சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி ஆகியோர், துனிசியாவின் தலைநகரமான துனிஸ் என்னுமிடத்தில் நடைபெற்ற உலக மேசைப் பந்துப்
போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
விளையாட்டுச்
செய்திகள்:
உலகக்
கோப்பைப் போட்டிக்கான கோப்பை விண்வெளியில் அறிமுகம்.
·
சர்வதேச
கிரிக்கெட் சபையானது (ICC), 2023 ஆம் ஆண்டு ODI உலகக்
கே போட்டிக்கான கோப்பையினை மிகவும் தனித்துவமான முறையில் வெளியிட்டது.
·
இது
பூமியிலிருந்து சுமார் 1,20,000 அடி உயரத்தில் உள்ள
விண்வெளிப் பை மண்டலத்தில் இருந்த
படி அறிமுகப் படுத்தப்பட்டது.
·
அந்த
உயரத்தில் வெப்பநிலை -65 டிகிரி செல்சியஸ் ஆகும்.
·
இப்போட்டியினை
நடத்த உள்ள இந்தியாவிற்கு இந்தக்
கோப்பை மீண்டும்.
ஆப்பிரிக்காவின்
கிழக்கு மற்றும் முனைப் பகுதி மற்றும் கிரேட் லேக்ஸ் பகுதி குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை.
·
ஆப்பிரிக்காவின்
கிழக்கு மற்றும் முனைப் பகுதி மற்றும் கிரேட் லேக்ஸ் (பெரும் ஏரி) (EHAGL) பகுதியில் தோராயமாக 11.71 மில்லியன் அளவில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்கள்
வாழ்கின்றனர் (IDPs).
·
இந்த
அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய
நாடுகள் சபையின் உயர் ஆணைத்தினால் (UNHR) வெளியிடப் பட்டுள்ளது.
·
முக்கியமாக
புருண்டி, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் வாழும்
உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்கள்
தொகை முறையே 75,300,2.73 மில்லியன், 3 மில்லியன், 2.23 மில்லியன் மற்றும் 3.7 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
·
கிழக்கு
ஆப்பிரிக்காவின் புருண்டியில் நிகழும் பெரும்பாலான புலம்பெயர்வுகள் தீவிர சூறாவளி, அடைமழை மற்றும் வெள்ளம் போன்ற பருவநிலை தொடர்பான பல்வேறு சம்பவங்களால் ஏற்பட்டுள்ளன.
·
புருண்டி
பருவநிலையினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 20 உலக நாடுகளில் ஒன்றாக
உள்ளது.
புதிய
உலக நிதி ஒப்பந்தம் குறித்த உச்சி மாநாடு
·
பிரான்சு
அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற புதிய உலக நிதி ஒப்பந்தம்
குறித்த (ஒப்பந்த உச்சி மாநாடு) உச்சி மாநாட்டினைத் தலைமை ஏற்று நடத்தினார்.
·
பருவநிலை
மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) 27வது பங்குதாரர்கள் மாநாட்டில்
(COP27) இது குறித்து அறிவிக்கப்பட்டது.
·
பிரிட்ஜ்டவுன்
முன்னெடுப்பின் தொடர்ச்சியாக இந்த உச்சி மாநாடானது
நடத்தப்பட்டது.
·
இது
பருவநிலை மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்காக என்று பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளிடமிருந்து வளர்ந்து வரும் நாடுகள் அதிகப் பணத்தைப் பெறுவதற்கான பல முன்மொழிவுகளின் தொகுப்பாகும்.
அர்ஜென்டினா,
கேமரூன், சீனா, எகிப்து மற்றும் செர்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த
ஐந்து இளம் அறிவியலாளர்கள் யுனெஸ்கோ
அமைப்பின் அல் ஃபோசன் சர்வதேசப்
பரிசினைப் பெற்றுள்ளனர்.
·
அறிவியல்,
தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் இளம்
அறிவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்தப் பரிசானது வழங்கப்படுகிறது.
·
இது
சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஃபோசான்
என்ற அறக்கட்டளையுடன் இணைந்து யுனெஸ்கோ அமைப்பினால் 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
No comments:
Post a Comment