வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி - Bharat Earth Movers Limited company Recruitment 2013

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்று முன்னர் அழைக்கப்பட்ட பி.இ.எம்.எல்., நிறுவனம் ரயில் கோச்களைத் தயாரித்தல், சுரங்கப் பணிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக 1964ல் நிறுவப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் இந்த நிறுவனத்திற்கு விக்ஞ்யான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்., என்ற கிளை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கர்னாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிரெய்னி பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஐடிஐ டிரெய்னி
பயிற்சிக்கான பிரிவுகள்: Moulder, Fitter, Turner, Mechanic(Diesel)
வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகள் பணி 2013

hindustan recruitment 2013
இந்தியாவில் இயங்கி வரும் பெட்ரோலிய நிறுவனங்களில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். இந்த நிறு
வனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த துறை சார்ந்த சந்தைப் பங்கில் 20 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆபிசர் டிரெய்னிங் வகையிலான 2 பிரிவுகளில் உள்ள 39 காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆபிசர் டிரெய்னி, குவாலிடி கண்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ், எச்.ஆர்., எனப்படும் மனிதவளம்
வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வேறுபடும். இணையதளத்தைப் பார்க்கவும்.

கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் பயனளிக்கிறதா..? - Is Rural Employment Guarantee Scheme benefit ..?

நூறு நாள் வேலை உறுதி திட்டம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையும் அதற்கான கூலியையும் உத்தரவாதப்படுத்திய ஒரு முக்கிய திட்டம்.
ஊராட்சி மற்றும் பேரூராட்சி மட்டத்தில் உள்ள திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
மத்திய அரசின் திட்டங்களில் மிகச்சிறந்த ஒன்றாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கருதப்படுகிறது.
ஆனால், இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. 
கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலையை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த தினக்கூலி 148 ரூபாய்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...