நூறு நாள் வேலை உறுதி திட்டம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையும் அதற்கான கூலியையும் உத்தரவாதப்படுத்திய ஒரு முக்கிய திட்டம்.
ஊராட்சி மற்றும் பேரூராட்சி மட்டத்தில் உள்ள திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
மத்திய அரசின் திட்டங்களில் மிகச்சிறந்த ஒன்றாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கருதப்படுகிறது.
ஆனால், இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலையை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த தினக்கூலி 148 ரூபாய்.
ஊராட்சிகளின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
மண்வெட்டி, கடப்பாரையுடன் குளம் வெட்டுதல், கண்மாய் தூர்வாருதல் போன்ற பணிகளில் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த கூலி அவர்களுக்கு வந்து சேருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் ஊதியம் வழங்குவதில் உள்ள குறைபாடு தொடர்பாக அடிக்கடி பயனாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 நாள் வேலைத் திட்டத்தால் நாடு முழுவதும் 5 கோடி குடும்பங்களுக்கும் மேல் பயன்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் இத்திட்டத்தால் விவசாய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த மாபெரும் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் உள்ள முறைகேடுகளைத் தவிர்க்க அஞ்சலகம் அல்லது வங்கி கணக்குகள் மூலம் கூலி வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் சிறப்பு அம்சம்
இயற்கைச் சீற்றங்களான புயல், வறட்சி, பஞ்சம், பட்டினி ஏற்படும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பையும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டதே 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டம்.
U 2005 - ம் ஆண்டு மே 25-ம் தேதி இந்த திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
U 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ஊராட்சி மன்றங்கள் மூலம் நிறைவேற்றப்படும் இத்திட்டத்திற்கான ஒப்புதலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் வழங்குகிறார்.
U ஏரிகள், குளங்கள், கண்மாய், வாய்க்கால் தூர் வாருதல், கிராமங்களில் புதிய மண் சாலை அமைத்தல், சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்டப் பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
U ஆண்டுக்கு 100 நாட்கள் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
U இந்த வேலைக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெயர், வயது, முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
U இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி அட்டை வழங்கப்படும். அவர்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
வெளிப்படைத்தன்மை இல்லை
100 நாள் வேலைத்திட்டத்தின் இன்றைய நிலவரம் குறித்து அத்திட்டத்தை உருவாக்கிய குழுவில் பணியாற்றிய ஆன்னி ராஜாவுடன் புதிய தலைமுறை நேர்காணல் கண்டது.
புதிய தலைமுறை: ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிறார்களே.?
ஆன்னி ராஜா: ஆமாம். வெளிப்படைத்தன்மை என்பது குறைந்துள்ளதாகதான் நான் கருதுகிறேன். முதலில் தேசிய அளவில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள உறுப்பினர்கள் அனைத்து மாநிலத்திற்கு சென்று பணிகள் குறித்தும், வழங்கப்படும் ஊதியம் குறித்தும் ஆய்வு செய்வார்கள். ஆனால், ஐமுகூட்டணியின் 2வது அரசு மாற்றங்கள் கொண்டு வந்ததையடுத்து, தேசிய குழுவை செயலிழக்கவைத்துவிட்டது. இதனால், வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள் குறைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.
No comments:
Post a Comment