நூறு நாள் வேலை உறுதி திட்டம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையும் அதற்கான கூலியையும் உத்தரவாதப்படுத்திய ஒரு முக்கிய திட்டம்.
ஊராட்சி மற்றும் பேரூராட்சி மட்டத்தில் உள்ள திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
மத்திய அரசின் திட்டங்களில் மிகச்சிறந்த ஒன்றாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கருதப்படுகிறது.
ஆனால், இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலையை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த தினக்கூலி 148 ரூபாய்.