வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

சென்னை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணிகளுக்கு உத்தேச பட்டியல் வெளியீடு 2013

சென்னை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட 40 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு உள்ளவர்களை சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இளங்கலை பட்டம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்.

சித்த மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சிலில் பல்வேறு பணிகள் 2013

சித்த மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சிலில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Bio Statistics, Library Information Science, System Administration, Chemistry, Botany ஆகிய பிரிவுகளில் தலா ஒரு Senior Research Fellow காலிப் பணியிடம் உள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வர்ம சிகிச்சை முறை ஆலோசகர் பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு சித்த மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நிர்வாகப் பிரிவில் ஆலோசகர் பணிக்கு உள்ள ஒரு காலிப் பணியிடத்திற்கு Under Secretary அளவிலான பணியில் இருந்து ஓய்வு பெற்ற 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடற் படையில் மாலுமிகளாக இசைக் கலைஞர்கள் தேர்வு 2013


இந்திய கடற் படையில் மாலுமிகளாக சேர தகுதியுள்ள இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் தேர்ச்சி, இசைத் திறன், உடல்தகுதி மற்றும் மருத்துவ ரீதியான உடல் தகுதிச் சோதனையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி கால தொகுப்பூதியத்துடன் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படும். ஒடிசாவில் உள்ள INS சில்காவில் அக்டோபர் 8-ஆம் தேதி முதல் 15 வார கால அளவிலான அடிப்படை பயிற்சிகள் தொடங்குகிறது.
பயிற்சிக்கு பின்னர் தேர்வர்கள் மும்பையில் 26 வார கால தீவிர பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவர். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், 15 ஆண்டு காலம் பணியில் அமர்த்தப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு www.nausena.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். முதல் நிலை எழுத்துத் தேர்வு மும்பை, கொல்கத்தா, டெல்லி, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் நடைபெறும். தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 011 - 4371 2405 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த பணியிடங்களில் சேர தேவையான அடிப்படைத் தகுதிகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...