சென்னை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட 40 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு உள்ளவர்களை சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இளங்கலை பட்டம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்.
அதன்படி 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கால கட்டத்தில், 30 வயதிற்கு உட்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு இல்லை.
பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப் பட்டவர்களின் உத்தேச பட்டியல் சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment