இந்திய கடற் படையில் மாலுமிகளாக சேர தகுதியுள்ள இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் தேர்ச்சி, இசைத் திறன், உடல்தகுதி மற்றும் மருத்துவ ரீதியான உடல் தகுதிச் சோதனையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி கால தொகுப்பூதியத்துடன் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படும். ஒடிசாவில் உள்ள INS சில்காவில் அக்டோபர் 8-ஆம் தேதி முதல் 15 வார கால அளவிலான அடிப்படை பயிற்சிகள் தொடங்குகிறது.
பயிற்சிக்கு பின்னர் தேர்வர்கள் மும்பையில் 26 வார கால தீவிர பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவர். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், 15 ஆண்டு காலம் பணியில் அமர்த்தப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு www.nausena.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். முதல் நிலை எழுத்துத் தேர்வு மும்பை, கொல்கத்தா, டெல்லி, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் நடைபெறும். தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 011 - 4371 2405 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த பணியிடங்களில் சேர தேவையான அடிப்படைத் தகுதிகள்:
இந்திய கடற் படையில் மாலுமி காலிப் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் ஆட்கள் நியமிக்கப்படுவர். இசைக் கலைஞர்கள் இந்த பணியிடங்களில் சேர தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்திய குடியுரிமை உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்த பணியில் சேர விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் 1992-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்று முதல் 1996 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மெட்ரிக்குலேஷன் படிப்பில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
மேற்கத்திய இசையில் ஆழ்ந்த அறிவுடன், இசைக் கருவிகளை இசைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசை அறிவு குறித்த தேர்வுக்கு பின் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடல்தகுதித் தேர்வுகள் ஜூலை 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வில் 1 புள்ளி 6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி கடக்க வேண்டும், 20 ஸ்குவாட் அப்ஸ், 10 புஷ் அப்ஸ் ஆகியவற்றை செய்ய வேண்டும். மருத்துவ ரீதியான உடல் தகுதித் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மும்பையில் உள்ள INS கஞ்சலி, கொலாபா பகுதியில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
இந்திய கடற் படையில் மாலுமி பணியிடங்களுக்கு தேர்வு குறித்தும், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இப்போது பார்க்கலாம்.
இந்திய கடற் படையில் மாலுமி பணியிடங்களுக்கு தேர்வு குறித்தும், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இப்போது பார்க்கலாம்.
விண்ணப்ப மாதிரிப் படிவங்களை www.nausena-bharti.nic.in என்ற இணைய தள முகவரியில் பெறலாம். விண்ணப்பங்களை A4 அளவு தாளில் தயாரித்து தகவல்களை நிரப்ப வேண்டும். ஒரே விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தால் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்ப உறையில் 10-ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் படிப்பில் பெற்ற சராசரி மதிப்பெண்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். சமீபத்திய புகைப்படங்களின் பின்புறம் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
The Commanding Officer, for Director of Music, INS கஞ்சலி, Colaba, Mumbai - 400 005.
The Commanding Officer, for Director of Music, INS கஞ்சலி, Colaba, Mumbai - 400 005.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஏப்ரல் 19-ஆம் தேதி கடைசி நாள். வடகிழக்கு இந்திய மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment