தமிழ்நாடு அரசுத் துறைகளில் அறிவியல் உதவியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
Grade II அளவிலான அறிவியல் உதவியாளர் பணிக்கு 33 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதே போல் தொழிற்சாலைகளுக்கான உதவிப் பொறியாளர் பணிக்கு 40 காலிப் பணியிடங்கள் உள்ளன. இரண்டு பணிகளுக்கும் தேர்வு இரண்டு தாளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். அறிவியல் உதவியாளர் பணிக்கு ஜூன் மாதம் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெறும்.
உதவிப் பொறியாளர் பணிக்கு ஜூன் மாதம் 9-ஆம் தேதி காலை மற்றும் மதியம் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பங்கள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை பெற www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களைப் பார்க்கவும்.
இந்த தேர்வில் பங்கேற்க தேவையான அடிப்படை கல்வித் தகுதிகள்:
தமிழக அரசுத் தொழில் துறைகளில் உதவிப் பொறியாளர், மற்றும் அறிவியல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க தேவையான அடிப்படை கல்வித் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம். .
அறிவியல் உதவியாளர் பணிக்கு தடய அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படும் பிரிவு முடிவு செய்யப்படும்.
உதவிப் பொறியாளர் பணிக்கு, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் டெக்னாலஜி ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். அல்லது மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பொது பொறியியல் பணிமனை அனுபவம், அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 6 மாதம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம். அல்லது உற்பத்தி நிறுவனங்களில் மேற்பார்வையாளர் அல்லது பணியாளராக குறைந்த பட்சம் 6 மாத காலம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
டிஎன்பிஎஸ்சியின் சார்பில் அறிவியல் உதவியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்விற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
டிஎன்பிஎஸ்சியின் சார்பில் அறிவியல் உதவியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்விற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம், ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இந்த தேர்வில் பங்கேற்க ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயும், தேர்வுக் கட்டணம் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கவும், கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net இணைய தளங்களைப் பார்க்கவும். விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க ஏப்ரல் 17-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment