வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாத சுமார் ஒரு லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள வருமான வரித் துறை, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க தேவையான பணியில் இறங்கியுள்ளது.
வரி செலுத்தாதவர்களை கணக்கிடவும், அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கவும் வருமான வரித் துறையில் தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நீக்க அது முயன்று வருகிறது. பல்வேறு பதவிகளில் சுமார் 19 ஆயிரம் அதிகாரிகளை இந்த ஆண்டில் நியமிக்க வருமான வரித்துறை சார்பில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த துறையின் உயரதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வருமான வரித் துறையில் 800 முதுநிலை அதிகாரிகள், 18 ஆயிரம் குரூப் பி, சி நிலை ஊழியர்களைத் தேர்வு செய்ய மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் ஊழியர் தேர்வு தொடங்கும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment