வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

இந்திய துப்பாக்கி தளவாடத் தொழிற்சாலையில் பல்வேறு பணிகள் 2013


மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா பகுதியில் உள்ள இந்திய துப்பாக்கி தளவாடத் தொழிற்சாலையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாந்த்ரா ஆயுத தொழிற்சாலையில் குரூப் 'C' பிரிவின் கீழ் தர்வான், Lab Assistant, Boiler Attendant, Electrician, Mechanist, Turner, Welder மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த Fitter பணிகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மத்திய அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பட்சமாக Danger Building Worker பணிக்கு 500 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 164 பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 153 பணியிடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும்,
தாழ்த்தப்பட்டோருக்கு 40 இடங்களும், பழங்குடியினருக்கு 63 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வி, உடல்திறன் தகுதி, எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். இந்த காலிப் பணியிடங்கள் மற்றும் தேர்வு முறை குறித்த கூடுதல் விவரங்களைப் பெற www.propex.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.
அடிப்படைத் தகுதிகள்:
மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ராவில் உள்ள துப்பாக்கி தளவாடத் தொழிற்சாலையில் உள்ள பணியிடங்களில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தர்வான் பணிக்கு மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 165 சென்டி மீட்டர் உயரம் உடையவர்களாக இருக்க வேண்டும். மார்பளவு இயல்பான நிலையில் 77 சென்டி மீட்டரும், விரிந்த நிலையில் 82 சென்டி மீட்டரும் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 45 கிலோ எடையுடையவர்களாக இருப்பதும் அவசியம்.
முன்னாள் ராணுவத்தினர், Home Guard மற்றும் Civil Defence-ல் குறைந்த பட்சம் மூன்றாண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். Laboratory Assistant பணிக்கு அறிவியல் பிரிவில் உயர்நிலைக் கல்வியை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பாடம் நடத்தும் திறமை பெற்றவர்களுக்கும், மராத்தி மொழியில் வகுப்பு எடுக்கும் திறன் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதர பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும், ITI அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து NCVT மூலம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
பாந்த்ராவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஐ.டி.ஐ உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம். .
விண்ணப்பங்களை பெறவும், கூடுதல் விவரங்களுக்கும், www.propex.gov.in என்ற இணைய தளத்தைக் காணலாம். காலிப் பணியிடங்களுக்கான சேர்க்கை குறித்து இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும் தகவல்களை தேர்வர்கள் தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு தேர்வரும் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க ஏப்ரல் 19-ஆம் தேதி கடைசி நாள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே, தேர்ச்சி குறித்த தகவல் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...