வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

CISF-ல் 464 தலைமை காவலர் பணியிடங்கள்


CISF எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Head Constable பணியில் சேர விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
464 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு முறையில் நியமனம் நடைபெற உள்ளது. அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்படும். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 167 புள்ளி 5 சென்டி மீட்டரும், பெண்கள் 157 சென்டி மீட்டரும், உயரம் இருக்க வேண்டியது அவசியம். சாதி மற்றும் இதர தகவல்களின் அடிப்படையில், சில தளர்வுகள் உண்டு. விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். மேலதிக விவரங்களை பெற, www.cisf.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம்.
தேர்வு நடைபெறும் முறைகள்:

மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் Head Constable பதவிக்கான தேர்வு நடைபெறும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.
நான்கு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். முதல் நிலையாக எழுத்துத் தேர்வு நடைபெறும். 100 கேள்விகள் கொள்குறி முறையில் கேட்கப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வில், பொது அறிவு, ஆங்கிலம் அல்லது இந்தி மற்றும் கணிதம் உள்ளிட்டவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். கணினியில் நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளும், நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இதனை சோதிக்க பத்து நிமிட தேர்வு நடத்தப்படும். கல்வி, வயது, உடல்தகுதி உள்ளிட்டவை தொடர்பான சான்றிதழ்கள் சரிபார்ப்பும் நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்கள், தகுதித் தேர்வுகள் மற்றும் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் head constable பதவிக்கான தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கு பிப்ரவரி 26-ம் தேதி கடைசி நாள். வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு மார்ச் 5ம் தேதி கடைசி நாள். விண்ணப்பக் கட்டணமான 50 ரூபாயை Postal Orderஆக, PAO, CISF New Delhi என்ற பெயரில் எடுத்து DIG, CISF Campus, Saket, PO Malviya Nagar, New Delhi - 110 017 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக தேர்வர்கள், DIG, CISF South Zone, Rajaji Bhawan, "D" Block, Besant Nagar, Chennai-90 என்ற பெயரில் Postal Order-ஐ அனுப்பினால் போதுமானது. Assistant Commandant (DDO) CISF, South Zone, Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மேல், APPLICATION FOR THE POST OF HEAD CONSTABLE MINISTERIAL என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சமீபத்திய புகைப்படத்தில் Gazetted Officer-ன் கையொப்பத்துடன், விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். 3 சுய முகவரியிட்ட அஞ்சல் உறைகள் மற்றும் 22 ரூபாய்க்கான அஞ்சல் தலைகள் ஒட்டிய 2 அஞ்சல் உறைகளையும் இணைத்து அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, www.cisf.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...