இந்திய கடற்படையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
General Service பிரிவில், தொழில்நுட்ப பணிகள், நீர்முழ்கி கப்பல் பணி, மற்றும் Executive பணிகளுக்கு பொறியியல் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வர்களுக்கான நேர்காணல், கோவை, பெங்களூரு, போபால் ஆகிய நகரங்களில் நடைபெறும். இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் தேர்வுகளில் முதல் பிரிவில், Intelligent Test, Picture Perception மற்றும் குழுவிவாதம் நடத்தப்படும்.
இரண்டாம் பிரிவில், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த பிரிவுகள் சார்ந்த அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்படும். Executive ஆக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், கடற்படை சார்ந்த, வான்வழி, நிலவழி மற்றும் நீர்வழி செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவர்.
Hydrography officer-ஆக தேர்வு செய்யப்படுபவர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு நீர்நிலைகளின் தன்மை குறித்த ஆய்வுகளில் ஈடுபட வேண்டியிருக்கும். பாதுகாப்பான கடல் பயணத்தை உறுதி செய்வது Hydrography Officer-ன் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிரிவில் தேர்வு செய்யப்படுபவர்கள், கடற்படைக்கு சொந்தமான கப்பல், விமானம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்த பணி வாய்ப்பை பெற தேவையான அடிப்படைத் தகுதிகள்:
இந்திய கடற்படையில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியுடன் கூடிய இந்த பணி வாய்ப்பை பெற தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்திய கடற்படையில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியுடன் கூடிய இந்த பணி வாய்ப்பை பெற தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
அனைத்துப் பணிகளுக்கும், 19 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுச் சேவை தொழில்நுட்பப் பிரிவில் Mechanical, Marine, Automotive, Mechatronics, Industrial & Production உள்ளிட்ட பிரிவுகளில் B.E. அல்லது B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Submarine பிரிவில் உள்ள பணிகளுக்கு, மெக்கானிக்கலில் பொறியியல் படித்தவர்களும், Electrical பிரிவு பணிகளுக்கு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கண்ட்ரோல், Tele communication மற்றும் Instrumentation படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive பணிகளில் சேர, ஏதேனும் ஒரு பிரிவில் B.E அல்லது B.Tech படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். NCC 'C' சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
பொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சேர விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சேர விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்புகள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். ஆன் லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி, சரிபார்த்து கொண்டு விண்ணப்பத்தை பதிவு செய்யவும். விண்ணப்பத்தை பதிவு செய்த பின்னர், இணையதளம் மூலம் விண்ணப்ப எண் ஒன்று உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
இந்த எண் வழங்கப்படாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக விண்ணப்பதாரர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை, இரண்டு பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரதியை, Post Box No 4, Nirman Bhawan, New Delhi - 110 011 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பத்துடன், 10-ஆம் வகுப்பு, +2 மதிப்பெண் சான்று, கல்வி மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களுடன், கையொப்பம் இட்ட புகைப்படம் உள்ளிட்டவற்றையும் இணைத்து அனுப்பவும். விண்ணப்ப உறையில் பணிபுரிய விரும்பும் பிரிவு, கல்வித் தகுதி, மதிப்பெண் சராசரியுடன் NCC சான்றிதழ் இருந்தால் அவற்றின் விவரங்களையும் குறிப்பிட்டு சாதாரண அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஏப்ரல் 23-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
click here:www.nausena-bharti.nic.in
No comments:
Post a Comment