வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

எல்லைக் காவல் படையில் 717 பணியிடங்கள் April Updates 2013

எல்லைக் காவல் படையில் 717 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்தோ–திபெதன் பார்டர் போலீஸ் போர்ஸ் சுருக்கமாக ஐ.டி.பீ.பி. என அழைக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த காவல்படை பிரிவில் தற்போது பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் (இந்தி டிரான்ஸ்லேட்டர்), ஹெட் கான்ஸ்டபிள் (டிரெஸ்ஸர் வெட்னரி), கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்), சப்–இன்ஸ்பெக்டர் (ஓவர்சீயர்), கான்ஸ்டபிள் (பயோனீர்), ஹெட்கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்), கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்), கான்ஸ்டபிள் (டிரைவர்) போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 717 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – பணியிடங்கள்

1. இன்ஸ்பெக்டர் (இந்தி டிரான்ஸ்லேட்டர்) – 13
2. ஹெட்கான்ஸ்டபிள் (டிரெஸ்ஸர் வெட்னரி) – 16
3. கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்) – 104
4. சப்–இன்ஸ்பெக்டர் (ஓவர்சீயர்) – 40
5. கான்ஸ்டபிள் (பயோனீர்) – 197
6. ஹெட் கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) – 22
7. கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) – 38
8. கான்ஸ்டபிள் (டிரைவர்) – 247
வயது வரம்பு
1–வது பணிக்கு 30 வயதும், 2,3,4,6,7,8–வது பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டோரும், 5–வது பணிக்கு 18–23 வயதுடையோரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
2 முதல் 8 வரை உள்ள பணிகளுக்கு குறைந்தபட்சம் மெட்ரிக்குலேசன் தேர்ச்சியும் அத்துடன் பணி சார்பான பிரிவில் சான்றிதழ் படிப்பும் அவசியம். ஓவர் சீயர் பணிக்கு டிப்ளமோ சிவில் படித்தவர்களும், பயோனீர் பணிக்கு எலக்ட்ரீசியன், வெல்டர், பிளம்பர், பெயிண்டர் சான்றிதழ் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர் செல்லுபடியாகும் லைட், மீடியம், ஹெவி இவற்றில் ஒரு லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். 2 ஆண்டு டிரைவிங் செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
டிரான்ஸ்லேட்டர் பணிக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் மற்றொரு மொழியில் குறைந்தபட்சம் இளநிலை படிப்பிற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இவ்விரு மொழிகளில் ஒன்றில் இளங்கலைப்பட்டம் பெற்றவர்கள், ஏதேனும் ஒரு மொழியில் டிரான்ஸ்லேசன் சான்றிதழ் படிப்பு படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி
இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணிகளுக்கு குறிப்பிட்ட உடற்தகுதி அவசியம். ஒவ்வொன்றிற்குமான உடற்தகுதியை இணைய தளத்தில் காணலாம்.
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, டிரேடு டெஸ்ட், நேர்காணல் இவற்றில் அந்தந்த பணிகளுக்கு தகுதியான தேர்வுமுறைக்கு உட்படுத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணம் செலுத்துபவர்கள் மத்திய ஆளெடுப்பு அஞ்சல் முத்திரை அல்லது டி.டி. ஆக கட்டணத்தை இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து விண்ணப்ப படிவம் மற்றும் அனுமதி அட்டை (அட்மிட் கார்டு) தயாரிக்க வேண்டும். பின்னர் அதை தெளிவான கையொப்பத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி, சான்றொப்பம் இட்டு, சான்றிதழ் நகல், கட்டண அஞ்சல் முத்திரை அல்லது டி.டி. ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும். டிரான்ஸ்போர்ட் கேடர், பயோனீர், மற்றும் இதர பணிகளுக்கு வெவ்வேறு முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த முகவரியை இணையதளத்தில் காணலாம்.
முக்கிய தேதி
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 22–4–13
மேலும் விரிவான விவரங்களை அறிய www.itbpolice.nic.in, www.itbp.gov.in ஆகிய இணையதளங்களைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...