மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த நடைமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதனை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று அறிவித்தார்.
இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது-"சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்து கொள்கிறது. மத்திய அரசு பணியளர் தேர்வாணய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அது வரை புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment