ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமை பரமக்குடி நகர்மன்ற தலைவர் கீர்த்திகா முனியசாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கணினி, மகப்பேறு உதவியாளர், நர்சிங் உதவியாளர், தையல், 4 சக்கர வாகன ஒட்டுநர் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
பரமக்குடி நகராட்சியின் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் தேர்வு செய்யப்படுவோக்கு பணியின் தன்மைக்கேற்ப 15 முதல் 45 நாட்கள் வரை பயிற்சிகள் வழங்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment