வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

டிஎன்பிஎஸ்சி புதிய தலைவர் நவநீத கிருஷ்ணன்: 12ம் தேதியுடன் நட்ராஜ் ஓய்வு

 Navaneethakrishnan Is Tnpsc S New Chairman சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ் 23-1-2012 அன்று நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள் 62 வயதை அடைந்தாலோ அல்லது 6 ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டாலோ
அவர்களது பதவிக்காலம் முடிவடைந்துவிடும். 62 வயதாகும் நட்ராஜின் பதவிக்காலம் வரும் 12ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நவநீத கிருஷ்ணனுக்கு பதிலாக சோமையாஜி புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். நவநீத கிருஷ்ணன் வரும் 12ம் தேதிக்கு பிறகு பொறுப்பேற்றுக்கொள்வார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...