தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 421 மையங்களில், ஒரு லட்சத்து 67ஆயிரம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிவரை நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் தேர்வு நடை பெற்றது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கணினி உதவியுடன் விடைத்தாள்கள் திருத்தப்பட இருப்பதால், தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது. 10 நாட்களில் இந்த தேர்வுக்கான உத்தேச
விடைப்பட்டியல் வெளியிடப் படுகிறது. தங்களுக்கு தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக விலங்கியல், தாவரவியல் துறை மாணவர்கள் தெரிவித்தனர்.
Source From : Puthiathalaimurai Tv

No comments:
Post a Comment